Thursday, January 29, 2009

காலத்தின் கவிதை!

வீணாக நாங்கள்
விழ்வதில்லை,
விதைகளாகவே மண்ணில்
புதைகிறோம்!

வெற்றுடல்களாக நாங்கள்
விழ்வதில்லை,
மாபெரும் சரித்திரமாகவே
விழ்கிறோம்!

அல்ல
நம்மவர்கள் நிங்கள்
வாழ்வதற்காகவே
நாங்கள் சரித்திரமகின்றோம்!

குழிக்குள்ளும் எங்கள்
விழிகள் தூங்குவதில்லை,
எம் உடலின் தையல்கலேல்லாம்
உம்முடையவைதான்!

எங்களுக்கென்று வீடில்லை
ஏனெனில்
வீடே நாமானோம்!

எம் விழிகளின் முழிப்பில்தான்
உங்கள் விழிமடல்கள்
எப்போதும் திறந்து முடிக்கொள்கின்றன!

உங்களுக்கவே நாங்கள்
சுமைதாங்கியானோம்!
எல்லைகளில் நாங்கள் காய்வது
உங்களுக்கான நிழலுக்காக
மட்டுமல்ல
காவலுக்காகவும் தான்!

நட்டுவிட்ட துண்களாய்
கால்கடுக்க நாம்
நின்றதால் தான் - இன்று
நிங்கள் காலாறுகின்றிர்கள்!

மூச்சு வாங்க மூச்சு வாங்க
நாம் சுமந்த பாரங்க்களால் தான்
நிங்கள் இன்று
மூச்சு வாங்குகின்றிர்கள்!

வெற்றி வீரராய் நாம்
இருந்தபோதும்,
வெறும் வெட்டியார் போலவே
காட்டிக்கொண்டோம்!

கடவுள் பெயர் சொல்லி
கலவரங்கள் கரைகண்ட போதும்
"ஆதவனை" தவிர யாருக்கும்
தலைவணங்கிய சரித்திரமில்லை!

அன்று சங்குநாதம் பொழியும் போதும்,
களத்தில் நாம் இருந்தோம்
ஆயுதமாய்!
இன்று ஷெல் நாதம் பொழியும் போதும்
களத்தில் நாம் உள்ளோம் காவலரனாய்!

நாங்கள்
"மரங்கள்"

*--- ----*
இது 2003ஆம் ஆண்டு பாடசாலை போட்டி ஒன்றுக்காய் எழுதியது! ஒரு வார்த்தை ௯ட நான் இப்போது மாற்றவில்லை.
வார்த்தைகளின் சந்தங்கள் சரியாய வரவேண்டும் என்பதற்காய் ஒரு சில சொற்கள் அர்த்தம் தெரியாமலே அல்லது அப்படி ஒரு வார்த்தை இருக்குமா என்ற சந்தேகத்துடன் தான் எழுதினேன். அதை இப்போது எண்ணும் போது ...... முடியல அதை விடுங்க.....

இதை எழுதியபோது இருந்த களநிலவரம் தெரிந்தவர்கள் புரிந்து கொள்ளவார்கள் நான் என்ன சொல்ல வந்தேன் என்பதை!!!

இத்தனை பார்க்கும் போது இது போல எங்கயோ வாசித்த மாதிரி இருக்கு என்கிறிர்களா?
எது என்று சொல்லுங்கள் பார்ப்பம்???

(இதனை முதலில் நான் காட்டியது எனது நண்பன் விமலாதித்தனுக்கு தான்! இந்த பதிவை கண்டிப்பாக வாசிப்பான் என தெரியும்! கண்டிப்பாய் கருத்து எழுத வேணும் என அவனுக்கு ஒரு அன்பு கட்டளை இடுகிறேன்)

இரா பிரஜீவ்
29/01/2009

6 comments:

ஆதித்தன் said...

வைரமுத்து அவர்களின் ஒரு கவிதை,
ஒரு பெண் தன்னை ஸ்பரிசிக்கச் சொல்லுவதாய் தொடங்கி இறுதியில்
அது ஒரு குழந்தைக்கு சொல்லப்படுவதாய் முடியும்.
ஒரு ஆணுக்கு சொல்லப்படுவதாய் எண்ணவைத்துவிட்டு, முடிவு குழந்தைக்கு சொல்லப்பட்டது என்று திருப்புமுனை அளிக்கும்.

அந்தக் கவிதையின் பாதிப்பில் வந்ததே இது!

ஆதித்தன் said...

இன்றும் இக்கவிதையின் நிஜத்தை காலம் நிரூபித்துக்கொண்டு இருக்கிறது. ஹ்ம்!!

ராமக்ருஷ்ண ரோட் வீட்டில முன் மேசையில வச்சு வாசிச்ச ஞாபகம்! சரியாடா?

thevanmayam said...

அன்று சங்குநாதம் பொழியும் போதும்,
களத்தில் நாம் இருந்தோம்
ஆயுதமாய்!
இன்று ஷெல் நாதம் பொழியும் போதும்
களத்தில் நாம் உள்ளோம் காவலரனாய்!///

ந்ல்ல கவிதை

இரா பிரஜீவ் said...

கொய்யாலா உனக்கு நல்ல ஞாபகம்தான்!
ஆனா இது எதன் பாதிப்பும் இல்லை! இதை எழுதி ஒரு வருடங்களின் பின்புதான் கவிதையே பாடலாக என்ற ஒரு நிகழ்ச்சியில் அந்த கவிதையை பார்த்தேன்! ஆனால் அதற்கு முன்னாலே குமுதத்தில் இது கவிதையாக வந்ததாம், சத்தியமாக நான் அதை வாசிக்கவே இல்லை!!!

உண்மையாக இது யாருடைய பாதிப்பு என்றால் SJசுர்யாவினுடையதுதான் காரணம் இரட்டை அர்த்த வசனங்களை பார்த்து இதை ஏன் ஒரு நல்ல விதமாக பயன்படுத்த கூடாது என எண்ணி எழுதியதுதான். ஆக இது பாதிப்புதான் நீ சொன்னதன் பாதிப்பு அல்ல!!!

கருத்து நன்றி

இரா பிரஜீவ்
31/01/2009

ஆதவா said...

இறுதி வரியில் ஒரு ட்விஸ்ட்... அழகு... நான் என்னவோ என்று நினைத்தே வந்தேன்...

நீங்க "ஆதவனை" ன்னு சொன்னது யாரைங்க? :D :D

இரா பிரஜீவ் said...

கண்டிப்பாக உங்களை சொல்லவில்லை ஆதவா!

இதை விட விளக்கமா எழுத முடியாது ஆதவா! நம்ம ஊரு குட்டி குழந்தைக்கே புரியும்!

Post a Comment