Friday, January 23, 2009

சினிமாவில் படத்தொகுப்பு... ஒரு அறிமுகம்!

இந்திய சினிமா நாடு ரீதியாக பார்த்தால் உலகத்தில் மிகப்பெரிய சினிமா, 2008ஆம் ஆண்டு தகவலின் படி அதிக அளவான பட்ஜெட்டில் (எல்லா படங்களின் பட்ஜெட்டையும் சேர்த்துத்தான்)படமெடுத்தும் இந்திய சினிமாதான், அதைவிட ஆண்டுக்கு ஆண்டு பட்ஜெட்டினை கணிசமான அளவு அதிகரித்து மற்றைய சினிமாக்களின் வயிற்றில் புளியை கரைக்கும் வேலையையும் கடந்த ஐந்து வருடங்களாக உப தொழிலாகவே செய்து வருகிறது.

2008இல் மொத்த ஹாலிவுட் பட்ஜெட்டே 9.63 பில்லியன் அமெரிக்க டொலர்கள். 2007இனை விட 0.03 பில்லியன் டொலர்கள் குறைவானது. ஆனால் மொத்த இந்திய சினிமாவின் பட்ஜெட் 10 பில்லியன் டொலர்களை தாண்டும் என்கிறது இந்திய திரைப்பட தணிக்கை குழுவின் வலைத்தளம், ஆனால் கறுப்பு பணத்தின் விளையாட்டு அதிகமாக இருப்பதால் சரியான அளவு அவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம்.

இந்தியாவில் உள்ள 415 பிரதான மொழிகளுள் கிட்டத்தட்ட 30 மொழிகளில் மட்டுமே திரைப்படங்கள் வெளிவருகின்றன. அதிலும் "Feature film" எனும் வரிசையில் பார்த்தால் 7 மொழிகளில் வெளிவரும் திரைப்படங்களே உள்ளடங்குகின்றது. ஹிந்தி, தமிழ், தெலுங்கு, பெங்காலி, மராத்தி, மலையாளம், கன்னடம், ஆகிய மொழிகளே அவை. இந்த ஒழுங்கு அதிக பணம் புழங்கும் வரிசையில் வருகிறது.

இவ்வளவு மாஜாஜால வித்தைகள் காட்டியும் இந்திய சினிமா உலக சினிமாவோடு போட்டி போடும் அளவுக்கு அதன் தரம் இல்லாமைக்கு காரணம் என்ன?

1. அளவுக்கு அதிகமாக வெளிநாட்டு படங்களை அல்லது அதன் காட்சிகளை அப்பட்டமாக திருடுவது. ஆரம்பத்தில் பாடல்களில் மட்டுமே இருந்து வந்த இந்த திருட்டு வர வர காட்சிகளுக்கு மாறி இப்போது முழு படத்தையும் அப்படியே திருடுகிறார்கள். கேட்டால் impire என்று ஒரு redymade பதிலும் வைத்திருக்கிறார்கள்.

2. திரைப்படங்களுக்கு என்று ஒரு வகைப்படுத்தல் (Genre) இல்லாமை. ஒரே படத்தில் எல்லாமே இருப்பது உலக தரத்தை அடைவதை பெரும்பாலும் தடுக்கிறது. காரணம் எந்த வெளிநாட்டவரை கேட்டலும் அது என்ன "Genre" என்று தான் முதலில் கேட்பார்கள். பொதுவாக இந்திய சினிமாக்களுக்கு அவர்கள் வழங்கும் வகை Musical. காரணம் பாடல்கள் தான்.

3. பாடல்கள் : இந்திய சினிமாவின் தனிப்பெரும் சிறப்பம்சமே இந்த பாடல்கள் தான்!!! உலகமெங்கும் உள்ள பல நாடுகளின் திரையுலகங்கள் ஹாலிவுட் இன் பாதிப்பில் தம் பாதை மாறிப்போய்விட்ட நிலையில் குறிப்பாக அவுஸ்திரேலியாவின் திரையுலகின் இன்றைய நிலை, இந்திய சினிமாவில் ஹாலிவுட் இன் பாதிப்பு அவ்வளவுக்கு இல்லை எண்டே சொல்ல இன்னும் இந்திய திரைப்படங்களில் பாடல்கள் வருவதே ஒரே ஒரு சாட்சி.

என்னதான் ஓட்டு மொத்தமாக ஹாலிவுட் உடன் போட்டி போட முடியாவிட்டாலும் தொழில் நுட்பத்திலும் இற்கு சமமான தரத்தை பல வருடங்களாக தந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக தமிழ்நாட்டவரின் ஆதிக்கம் இந்த துறையில் இந்தியா பூராகவும் அதிகம் அதிலும் ஒளிப்பதிவாளர்களின் ஆதிக்கம் சற்றே அதிகம். ரவி கே சந்திரன், மணிகண்டன், ரவிவர்மன், rd.ராஜசேகர் என இது ஒரு பெரும் பட்டியல்.

ஆனால் இட்கிடல் தொழில் நுட்பம் வந்தபின் ஒரு படம் எடுப்பது இலகுவாகிப்போனது(முன்னரோடு ஒப்பிடுகையில்). வழமையாக தொழில்நுட்பம் பலவற்றை அழகாக்கியது, இந்திய சினிமாவையும் அழகாக்கியது ஆனால் அதன் மேல் அதிகமாக கரியையும் பூசியது. இந்த இடத்தில் அமெரிக்க இசைத்தொகுப்புக்களின் படத்தொகுப்பின் பாணி இந்திய சினிமா முழுவதும் ஆக்கிரமிக்க தொடங்கியது... இன்று படம் முழுவதும் இந்த பாணியிலான கொடுமை. இன்று வருகின்ற குறிப்பாக தமிழ் படங்களின் படத்தொகுப்பினை என்னவென்று சொல்வது! படம் பார்த்து முடிய தலையிடிதான் மிஞ்சும். இதில் ஒரு சில படங்கள் விதிவிலக்கு. இனி வரும் ஒவ்வொரு வாரமும் ஒரு பட வீதம் படத்தொகுப்பும் ஒளிப்பதிவையும் பற்றி விமர்சனமாக இல்லாமல் ஒரு விளக்கமாக ஒரு பதிவை இட எண்ணியுள்ளேன்.


இரா பிரஜீவ்
23/01/2009

1 comment:

Post a Comment