Thursday, January 29, 2009

காலத்தின் கவிதை!

வீணாக நாங்கள்
விழ்வதில்லை,
விதைகளாகவே மண்ணில்
புதைகிறோம்!

வெற்றுடல்களாக நாங்கள்
விழ்வதில்லை,
மாபெரும் சரித்திரமாகவே
விழ்கிறோம்!

அல்ல
நம்மவர்கள் நிங்கள்
வாழ்வதற்காகவே
நாங்கள் சரித்திரமகின்றோம்!

குழிக்குள்ளும் எங்கள்
விழிகள் தூங்குவதில்லை,
எம் உடலின் தையல்கலேல்லாம்
உம்முடையவைதான்!

எங்களுக்கென்று வீடில்லை
ஏனெனில்
வீடே நாமானோம்!

எம் விழிகளின் முழிப்பில்தான்
உங்கள் விழிமடல்கள்
எப்போதும் திறந்து முடிக்கொள்கின்றன!

உங்களுக்கவே நாங்கள்
சுமைதாங்கியானோம்!
எல்லைகளில் நாங்கள் காய்வது
உங்களுக்கான நிழலுக்காக
மட்டுமல்ல
காவலுக்காகவும் தான்!

நட்டுவிட்ட துண்களாய்
கால்கடுக்க நாம்
நின்றதால் தான் - இன்று
நிங்கள் காலாறுகின்றிர்கள்!

மூச்சு வாங்க மூச்சு வாங்க
நாம் சுமந்த பாரங்க்களால் தான்
நிங்கள் இன்று
மூச்சு வாங்குகின்றிர்கள்!

வெற்றி வீரராய் நாம்
இருந்தபோதும்,
வெறும் வெட்டியார் போலவே
காட்டிக்கொண்டோம்!

கடவுள் பெயர் சொல்லி
கலவரங்கள் கரைகண்ட போதும்
"ஆதவனை" தவிர யாருக்கும்
தலைவணங்கிய சரித்திரமில்லை!

அன்று சங்குநாதம் பொழியும் போதும்,
களத்தில் நாம் இருந்தோம்
ஆயுதமாய்!
இன்று ஷெல் நாதம் பொழியும் போதும்
களத்தில் நாம் உள்ளோம் காவலரனாய்!

நாங்கள்
"மரங்கள்"

*--- ----*
இது 2003ஆம் ஆண்டு பாடசாலை போட்டி ஒன்றுக்காய் எழுதியது! ஒரு வார்த்தை ௯ட நான் இப்போது மாற்றவில்லை.
வார்த்தைகளின் சந்தங்கள் சரியாய வரவேண்டும் என்பதற்காய் ஒரு சில சொற்கள் அர்த்தம் தெரியாமலே அல்லது அப்படி ஒரு வார்த்தை இருக்குமா என்ற சந்தேகத்துடன் தான் எழுதினேன். அதை இப்போது எண்ணும் போது ...... முடியல அதை விடுங்க.....

இதை எழுதியபோது இருந்த களநிலவரம் தெரிந்தவர்கள் புரிந்து கொள்ளவார்கள் நான் என்ன சொல்ல வந்தேன் என்பதை!!!

இத்தனை பார்க்கும் போது இது போல எங்கயோ வாசித்த மாதிரி இருக்கு என்கிறிர்களா?
எது என்று சொல்லுங்கள் பார்ப்பம்???

(இதனை முதலில் நான் காட்டியது எனது நண்பன் விமலாதித்தனுக்கு தான்! இந்த பதிவை கண்டிப்பாக வாசிப்பான் என தெரியும்! கண்டிப்பாய் கருத்து எழுத வேணும் என அவனுக்கு ஒரு அன்பு கட்டளை இடுகிறேன்)

இரா பிரஜீவ்
29/01/2009

Tuesday, January 27, 2009

வலைப்பூக்களில் பதிவாகும் திரை விமர்சனங்கள்; ஒரு பார்வை

கடந்த 10ம் திகதியிலிருந்து வலைப்பூக்களை திரட்டி தரும் அநேக தளங்களில் வில்லு படத்தின் விமர்சனங்கள் நிரம்பி வழிந்தன. முன்பு எல்லாம் பத்திரிகைகளில், பின்பு தொலைக்காட்சி அப்புறம் வானொலி என வந்த விமர்சனங்கள் இப்பொது வலைப்பூக்களில் தாரளமாக எல்லோராலும் எழுதப்படுகிறது. விமர்சனத்தின் விதிமுறை அறியாதோர் எழுதுவதுதான் கொடுமையிலும் கொடுமை.

சரி எழுதுவது அவரவர் உரிமை என வைத்து கொள்வோம், உதவாத படம் என ஒரு படத்தையே தாக்கி எழுதுவோர் நல்ல படங்களை பற்றி ஒரு வரியேனும் எழுதாமல் இருப்பது ஏன்?

இதை எண்ணி பார்க்கும் பொது ஒன்று மட்டும் புலனாகிறது. ஒரு நடிகரின் ரசிகர்கள் அவரின் படம் வரும் பொது அப்படத்தை தூக்கி வைத்து எழுதுவது (சண் தொலைக்காட்சி போல) மற்ற நடிகரின் படங்களை எப்பளவு நல்ல படமாக இருந்தாலும் தூற்றி எழுதுவதாகவே எனக்கு படுகிறது. இந்த நிலையில் இவர்களே சண் தொலைக்காட்சியை விமர்சிப்பதை என்னவென்று சொல்வது.

20 கோடியில் எடுக்கப்படும் படங்களை அது உதவாத படம் என்று தெரிந்தும் போய் பார்த்து முதளியாவது எடுக்க தயாரிப்பளருக்கு உதவுவோர் வெறும் 4 கோடி பட்ஜெட்டில் உருவாகும் நல்ல படங்களை பார்க்காமல் அதுவும் போட்ட முதலையே எடுக்க முடியாமல் தயாரிப்பாளரை நட்டமுற செய்கிறார்கள்.

அண்மையில் வெளிவந்த பூ, பொம்மலாட்டம் போன்ற தரமான படங்களை பற்றி யாரவது எழுதினார்களா? எழுதியவர்களை கை விரல்களால் எழுதிவிடலாம். அது சரி இவர்கள் அப்படியான படத்தை பார்க்க மாட்டர்கள். பார்த்தால் தானே எழுதுவதற்கு.

அதிக பட்ஜெட்டில் வெளிவரும் படங்களை நாலைந்து தடவைகள் பார்ப்பவர்கள் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படும் தரமான படங்களுக்கு ஒருதடவையேனும் சென்றால் இன்னும் ஆரோக்கியமான சினிமாக்கள் வெளிவர உதவியாய் இருக்கும்.

தென்னகத்தில் மட்டும் நடக்கும் ரசிகர்களின் ஆர்ப்படங்கள் தான் நல்ல சினிமாவை வெளிவருவதை தடுக்கிறது. இந்த நிலை வலைப்புக்களிலும் ஆரம்பமாவது ஆரோக்கியமான சினிமாவிற்கு நல்லதல்ல.

ஒரு சில உதாரணங்கள்
* தங்களின் தலைவருக்கு (?) அதாவது அவர்களுக்கு பிடித்த நடிகைன் பிள்ளையின் பிறந்தநாளுக்கு போஸ்டர் ஓட்டுவது, கண்ட கண்ட மாதிரி புகழ்வது.

* தங்கள் தலைவருக்கு (?) கிடைத்த கொளரவ டாக்டர் பட்டத்தை, அவர் பட்ட படிப்பு படித்து எடுத்தது போல காட்டி விளம்பரம் செய்வது

* பனருக்கு பாலாபிசேகம் செய்வது இப்போது பீர் அபிஷேகமும் நடக்குது.

* சொந்த செலவில் அவரவர்களுக்கு பிடித்த நடிக்க நடிகைகளுக்கு பனர் வைப்பது (இவ்வாறு வைப்பவர்கள் யார் என பார்த்தால் நடுத்தர குடும்பத்தை சார்ந்தவர்கள் தான், அவரவர் குடும்பத்தின் நிலையை என்ன வென்று சொல்லவது)

இந்த பட்டியல் இப்படியே தொடரும் ...

இந்த நிலை இப்போது வலைப்புக்களில் ஆரம்பித்திருப்பது ஆரோக்கியமானது அல்ல. தவறுகள் திருத்தப்படனும். நல்ல தரமான சினிமாக்கள் வெளிவர எல்லோரும் உதவனும்..


இரா பிரஜீவ்
28/01/2009

Friday, January 23, 2009

மனது மறக்காத காதல் பாடல்கள்!

இந்த பாடலை எழுதியவர் யார்? தெரிந்தால் சொல்லுங்களேன் பார்ப்போம்?

பாடியவர்கள் சொளந்தர்ராஜன், பானுமதி
இசை KV மகாதேவன்
படம் தாய்க்கு பின் தாரம்
வெளியான ஆண்டு 1956

அஹா நம் ஆசை நிறைவேறுமா?
கடல் அலையைப்போல மறைந்து போக நேருமா?
அன்பே சந்தேகம் கொள்ளலாமா?
கோடி அசைந்தாட பந்தல் இன்றி போகுமா?

ஈடில்லா இரு பறவை ஜோடியாய் வாழவே
எண்ணிடும் போதில் பகை வல்லுராக தோன்றுமோ?
வல்லுரானத்தை வனத்தில் வாழும் வேடனாகி நான்
வெல்லுவேனே உன்னிரு கண் அம்பினால்!

அமுத மொழி பேசி அழகாக பாய்வதால்
அகமே மகிழ்வேன் அத்தானே
உன் அழகே நீரோடை அதில் நீந்தும் மீனைப்போல்
ஆனந்தம் ஆனேன் என் கண்ணே!

உமது ஆனந்தமே அழியாச்செல்வமே!
ஆருயிரே நான் உனக்கே சொந்தமே!
ஈருடல் ஒருயிராய் வாழுவோம்,
சுகம் மாறாத இன்ப உலகை ஆளுவோம்!


பாடலை இங்கே இப்போது சேர்க்க முடியவில்லை.
இரா பிரஜீவ்
24/01/2009

சினிமாவில் படத்தொகுப்பு... ஒரு அறிமுகம்!

இந்திய சினிமா நாடு ரீதியாக பார்த்தால் உலகத்தில் மிகப்பெரிய சினிமா, 2008ஆம் ஆண்டு தகவலின் படி அதிக அளவான பட்ஜெட்டில் (எல்லா படங்களின் பட்ஜெட்டையும் சேர்த்துத்தான்)படமெடுத்தும் இந்திய சினிமாதான், அதைவிட ஆண்டுக்கு ஆண்டு பட்ஜெட்டினை கணிசமான அளவு அதிகரித்து மற்றைய சினிமாக்களின் வயிற்றில் புளியை கரைக்கும் வேலையையும் கடந்த ஐந்து வருடங்களாக உப தொழிலாகவே செய்து வருகிறது.

2008இல் மொத்த ஹாலிவுட் பட்ஜெட்டே 9.63 பில்லியன் அமெரிக்க டொலர்கள். 2007இனை விட 0.03 பில்லியன் டொலர்கள் குறைவானது. ஆனால் மொத்த இந்திய சினிமாவின் பட்ஜெட் 10 பில்லியன் டொலர்களை தாண்டும் என்கிறது இந்திய திரைப்பட தணிக்கை குழுவின் வலைத்தளம், ஆனால் கறுப்பு பணத்தின் விளையாட்டு அதிகமாக இருப்பதால் சரியான அளவு அவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம்.

இந்தியாவில் உள்ள 415 பிரதான மொழிகளுள் கிட்டத்தட்ட 30 மொழிகளில் மட்டுமே திரைப்படங்கள் வெளிவருகின்றன. அதிலும் "Feature film" எனும் வரிசையில் பார்த்தால் 7 மொழிகளில் வெளிவரும் திரைப்படங்களே உள்ளடங்குகின்றது. ஹிந்தி, தமிழ், தெலுங்கு, பெங்காலி, மராத்தி, மலையாளம், கன்னடம், ஆகிய மொழிகளே அவை. இந்த ஒழுங்கு அதிக பணம் புழங்கும் வரிசையில் வருகிறது.

இவ்வளவு மாஜாஜால வித்தைகள் காட்டியும் இந்திய சினிமா உலக சினிமாவோடு போட்டி போடும் அளவுக்கு அதன் தரம் இல்லாமைக்கு காரணம் என்ன?

1. அளவுக்கு அதிகமாக வெளிநாட்டு படங்களை அல்லது அதன் காட்சிகளை அப்பட்டமாக திருடுவது. ஆரம்பத்தில் பாடல்களில் மட்டுமே இருந்து வந்த இந்த திருட்டு வர வர காட்சிகளுக்கு மாறி இப்போது முழு படத்தையும் அப்படியே திருடுகிறார்கள். கேட்டால் impire என்று ஒரு redymade பதிலும் வைத்திருக்கிறார்கள்.

2. திரைப்படங்களுக்கு என்று ஒரு வகைப்படுத்தல் (Genre) இல்லாமை. ஒரே படத்தில் எல்லாமே இருப்பது உலக தரத்தை அடைவதை பெரும்பாலும் தடுக்கிறது. காரணம் எந்த வெளிநாட்டவரை கேட்டலும் அது என்ன "Genre" என்று தான் முதலில் கேட்பார்கள். பொதுவாக இந்திய சினிமாக்களுக்கு அவர்கள் வழங்கும் வகை Musical. காரணம் பாடல்கள் தான்.

3. பாடல்கள் : இந்திய சினிமாவின் தனிப்பெரும் சிறப்பம்சமே இந்த பாடல்கள் தான்!!! உலகமெங்கும் உள்ள பல நாடுகளின் திரையுலகங்கள் ஹாலிவுட் இன் பாதிப்பில் தம் பாதை மாறிப்போய்விட்ட நிலையில் குறிப்பாக அவுஸ்திரேலியாவின் திரையுலகின் இன்றைய நிலை, இந்திய சினிமாவில் ஹாலிவுட் இன் பாதிப்பு அவ்வளவுக்கு இல்லை எண்டே சொல்ல இன்னும் இந்திய திரைப்படங்களில் பாடல்கள் வருவதே ஒரே ஒரு சாட்சி.

என்னதான் ஓட்டு மொத்தமாக ஹாலிவுட் உடன் போட்டி போட முடியாவிட்டாலும் தொழில் நுட்பத்திலும் இற்கு சமமான தரத்தை பல வருடங்களாக தந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக தமிழ்நாட்டவரின் ஆதிக்கம் இந்த துறையில் இந்தியா பூராகவும் அதிகம் அதிலும் ஒளிப்பதிவாளர்களின் ஆதிக்கம் சற்றே அதிகம். ரவி கே சந்திரன், மணிகண்டன், ரவிவர்மன், rd.ராஜசேகர் என இது ஒரு பெரும் பட்டியல்.

ஆனால் இட்கிடல் தொழில் நுட்பம் வந்தபின் ஒரு படம் எடுப்பது இலகுவாகிப்போனது(முன்னரோடு ஒப்பிடுகையில்). வழமையாக தொழில்நுட்பம் பலவற்றை அழகாக்கியது, இந்திய சினிமாவையும் அழகாக்கியது ஆனால் அதன் மேல் அதிகமாக கரியையும் பூசியது. இந்த இடத்தில் அமெரிக்க இசைத்தொகுப்புக்களின் படத்தொகுப்பின் பாணி இந்திய சினிமா முழுவதும் ஆக்கிரமிக்க தொடங்கியது... இன்று படம் முழுவதும் இந்த பாணியிலான கொடுமை. இன்று வருகின்ற குறிப்பாக தமிழ் படங்களின் படத்தொகுப்பினை என்னவென்று சொல்வது! படம் பார்த்து முடிய தலையிடிதான் மிஞ்சும். இதில் ஒரு சில படங்கள் விதிவிலக்கு. இனி வரும் ஒவ்வொரு வாரமும் ஒரு பட வீதம் படத்தொகுப்பும் ஒளிப்பதிவையும் பற்றி விமர்சனமாக இல்லாமல் ஒரு விளக்கமாக ஒரு பதிவை இட எண்ணியுள்ளேன்.


இரா பிரஜீவ்
23/01/2009

Thursday, January 22, 2009

நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா?



புதிதா ஒருவர் பிரபலம் அடைந்திட்டால் இப்படித்தான்!!!
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா போல் தோற்றம் உடைய ஒருவர்!!!

நன்றி வீரகேசரி நாளிதழ்
81வது Academy Awards (OSCARS) இற்கான பரிந்துரைகள் நேற்று வெளியிடப்பட்டது அதன் விபரங்கள் வருமாறு

ACTOR IN LEADING ROLE
Richard Jenkins (THE VISITOR)
Frank Langella (FROST/NIXON)
Sean Penn (MILK)
Brad Pitt (THE CURIOUS CASE OF BENJAMIN BUTTON)
Mickey Rourke (THE WRESTLER)


ACTOR IN A SUPPORTING ROLE
Josh Brolin (MILK)
Robert Downey Jr. (TROPIC THUNDER)
Philip Seymour Hoffman (DOUBT)
Heath Ledger (THE DARK KNIGHT)
Michael Shannon (REVOLUTIONARY ROAD)


ACTRESS IN A LEADING ROLE
Anne Hathaway (RACHEL GETTING MARRIED)
Angelina Jolie (CHANGELING)
Melissa Leo (FROZEN RIVER)
Meryl Streep (DOUBT)
Kate Winslet (THE READER)


ACTRESS INA SUPPORTING ROLE
Amy Adams (DOUBT)
Penélope Cruz (VICKY CRISTINA BARCELONA)
Viola Davis (DOUBT)
Taraji P. Henson (THE CURIOUS CASE OF BENJAMIN BUTTON)
Marisa Tomei (THE WRESTLER)


ANIMATED FEATURE FILM
BOLT
KUNG FU PANDA
WALL-E


ART DIRECTION
CHANGELING
THE CURIOUS CASE OF BENJAMIN BUTTON
THE DARK KNIGHT
THE DUCHESS
REVOLUTIONARY ROAD


CINEMATOGRAPHY
CHANGELING
THE CURIOUS CASE OF BENJAMIN BUTTON
THE DARK KNIGHT
THE READER
SLUMDOG MILLIONAIRE


COSTUME DESIGN
AUSTRALIA
THE CURIOUS CASE OF BENJAMIN BUTTON
THE DUCHESS
MILK
REVOLUTIONARY ROAD


DIRECTION
THE CURIOUS CASE OF BENJAMIN BUTTON
FROST/NIXON
MILK
THE READER
SLUMDOG MILLIONAIRE


DOCUMENTARY FEATURE
THE BETRAYAL (NERAKHOON)
ENCOUNTERS AT THE END OF THE WORLD
THE GARDEN
MAN ON WIRE
TROUBLE THE WATER


DOCUMENTARY SHORT
THE CONSCIENCE OF NHEM EN
THE FINAL INCH
SMILE PINKI
THE WITNESS - FROM THE BALCONY OF ROOM 306


FILM EDITING
THE CURIOUS CASE OF BENJAMIN BUTTON
THE DARK KNIGHT
FROST/NIXON
MILK
SLUMDOG MILLIONAIRE


FOREIGN LANGUAGE FILM
THE BAADER MEINHOF COMPLEX
THE CLASS
DEPARTURES
REVANCHE
WALTZ WITH BASHIR


MAKEUP
THE CURIOUS CASE OF BENJAMIN BUTTON
THE DARK KNIGHT
HELLBOY II: THE GOLDEN ARMY


MUSIC (SCORE)
THE CURIOUS CASE OF BENJAMIN BUTTON
DEFIANCE
MILK
SLUMDOG MILLIONAIRE
WALL-E


MUSIC (SONG)
"Down to Earth" (WALL-E)
"Jai Ho" (SLUMDOG MILLIONAIRE)
"O Saya" (SLUMDOG MILLIONAIRE)


BEST PICTURE
THE CURIOUS CASE OF BENJAMIN BUTTON
FROST/NIXON
MILK
THE READER
SLUMDOG MILLIONAIRE


SHORT FILM (ANIMATED)
LA MAISON EN PETITS CUBES
LAVATORY - LOVESTORY
OKTAPODI
PRESTO
THIS WAY UP


SHORT FILM (LIVE ACTION)
AUF DER STRECKE (ON THE LINE)
MANON ON THE ASPHALT
NEW BOY
THE PIG
SPIELZEUGLAND (TOYLAND)


SOUND EDITING
THE DARK KNIGHT
IRON MAN
SLUMDOG MILLIONAIRE
WALL-E
WANTED


SOUND MIXING
THE CURIOUS CASE OF BENJAMIN BUTTON
THE DARK KNIGHT
SLUMDOG MILLIONAIRE
WALL-E
WANTED

VIAUAL EFFECTS
THE CURIOUS CASE OF BENJAMIN BUTTON
THE DARK KNIGHT
IRON MAN


WRITING (ADOPTED SCREENPLAY)
THE CURIOUS CASE OF BENJAMIN BUTTON
DOUBT
FROST/NIXON
THE READER
SLUMDOG MILLIONAIRE


WRITING (ORIGINAL SCREENPLAY)
FROZEN RIVER
HAPPY-GO-LUCKY
IN BRUGES
MILK
WALL-E


அதிகமான ஆங்கில எழுத்துக்களும் தமிழ்படுத்தினால் வருகின்ற குழப்பத்தை தவிர்க்கவும் ஆங்கிலத்திலேயே தரவேண்டிய கட்டாயம் ஆகிறது.

முதல் முறையாக ஒரு தமிழனுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருப்பது நமக்கெல்லாம் பெருமைப்படும் விஷயம் தானே!!!

பாடல்களுக்கான விருது ஆரம்பத்திலேயே வழங்கப்படுவதால் விருதுகள் வழங்கும் நிகழ்வின் ஆரம்பத்திலேயே இதன் முடிவை தெரிந்த கெள்ளலாம், பின்னணி இசைக்கான முடிவுக்கு கொஞ்சம் அதிகமாகவே காத்திருக்க வேண்டியிருக்கும். அனேகமாக விழாவின் கடைசி பாதிவரை...

எல்லாருக்கும் வாழ்த்துக்கள்!!!

இரா பிரஜீவ்
23/01/2009

Tuesday, January 20, 2009

2008இன் வசூல் கணக்கு

கடந்த வருடம் வெளிவந்து வசூலில் 100 மில்லியன் டொலர்களை தாண்டிய ஹாலிவுட் படங்களின் வரிசை. இதில் பல தோல்விப்படங்கள் உள்ளன முடிந்தால் சொல்லுங்கள்....
பதில் வெகு விரைவில்....


25.You Don't Mess With the Zohan ($100 million)

24. Step Brothers ($100.5 million)

23. Eagle Eye ($101.1 million)

22. Journey to the Center of the Earth ($101.7 million)

21. The Mummy: Tomb of the Dragon Emperor ($102.2 million)

20. Bolt ($104.5 million)

19. Tropic Thunder ($110.4 million)

18. Four Christmases ($111.6 million)

17. Juno ($112 million)

16. Get Smart ($130.3 million)

15. Wanted ($134.3 million)

14. The Incredible Hulk ($134.5 million)

13. The Chronicles of Narnia: Prince Caspian ($141.6 million)

12. Mamma Mia! ($143.7 million)

11. Sex and the City ($152.6 million)

10. Horton Hears a Who! ($154.5 million)

9. Quantum of Solace ($164.3 million)

8. Twilight ($169.9 million)

7. Madagascar: Escape 2 Africa ($174.9 million)

6. Kung Fu Panda ($215.4 million)

5. WALL·E ($223.8 million)

4. Hancock ($227.9 million)

3. Indiana Jones and the Kingdom of the Crystal Skull ($317 million)

2. Iron Man ($318.3 million)

1. The Dark Knight ($530.9 million)

இது 2008இன் கணக்கு மட்டும் தொடர்ந்து 2009இலும் ஓடிக்கொண்டிருக்கும் படங்களின் கணக்குகள் சேர்க்கப்படவில்லை

புதுக்கதை ஆனா பழைய விஷயம்!!!

கொஞ்சம் வில்லங்கமான அல்லது சுவாரசியமான பதிவு ஒன்றை இடவேணும் என்று பல நாட்களாக ஒரு ஆசை... கடைசியாக புதிதாக தகவலை தேடுவதை விட தெரிந்ததை பதியலாம் என இதோ தொடங்கிவிட்டேன்...

அது சரி என்னத்தை பற்றி எழுத போகிறேன்...

எனது மேற்படிப்புக்காய் நிறைய தேடல்கள்... வழமையா எல்லா துறையையும் போலத்தான். ஆனா எனது துறை கொஞ்சம் வேறுபட்டது, படத்தொகுப்பு...

ஒளிப்பதிவாளராக வரவேண்டும் என்ற பல கால இலட்சியத்தையும் இந்த சிட்னி மாற்றிவிட்டது. எனினும் யாருடைய உதவியும் கிடைக்காமையினால் சரியான படிப்பை தெரிந்து கொள்ளவதற்கே இரண்டு வருடங்கள் ஓடிவிட்டன... இப்போதுதான் சரியான அதுவும் மிகச்சரியான படிப்பை தொடருகிறேன்... அனுபவம் தான் மிகச்சிறந்த ஆசான் என்பதை பல ஆயிரம் டொலர்களையும் இரண்டு வருட வாழ்க்கையையும் தொலைத்து உணர்ந்து கொண்டேன்.

சரி இனி விடயத்துக்கு வருவோம்.

வரப்போகும் இந்த தொடர் ஆக்கம் முழுக்க முழுக்க சினிமா மற்றும் தொலைக்காட்சி படத்தொகுப்பு மற்றும் அதனுடன் சம்பந்தமானது. எதோ எனக்கு தெரிந்த நான் அறிந்த விடயங்களை உங்களுடன் பகிரப்போகிறேன்...

இந்த தொடர் ஒரு விமர்சனம் மட்டும் இல்லாமல் அதன் நல்ல பக்கங்களை உங்களுடன் பகிரப்போகிறேன்....

இப்பவே எழுதணும் போல இருந்தாலும் நேரப்பற்றாகுறை காரணமா அடுத்த வாரத்திலிருந்து வாரா வாரம் வரும்...


இரா பிரஜீவ்
20/01/2009