Tuesday, January 27, 2009

வலைப்பூக்களில் பதிவாகும் திரை விமர்சனங்கள்; ஒரு பார்வை

கடந்த 10ம் திகதியிலிருந்து வலைப்பூக்களை திரட்டி தரும் அநேக தளங்களில் வில்லு படத்தின் விமர்சனங்கள் நிரம்பி வழிந்தன. முன்பு எல்லாம் பத்திரிகைகளில், பின்பு தொலைக்காட்சி அப்புறம் வானொலி என வந்த விமர்சனங்கள் இப்பொது வலைப்பூக்களில் தாரளமாக எல்லோராலும் எழுதப்படுகிறது. விமர்சனத்தின் விதிமுறை அறியாதோர் எழுதுவதுதான் கொடுமையிலும் கொடுமை.

சரி எழுதுவது அவரவர் உரிமை என வைத்து கொள்வோம், உதவாத படம் என ஒரு படத்தையே தாக்கி எழுதுவோர் நல்ல படங்களை பற்றி ஒரு வரியேனும் எழுதாமல் இருப்பது ஏன்?

இதை எண்ணி பார்க்கும் பொது ஒன்று மட்டும் புலனாகிறது. ஒரு நடிகரின் ரசிகர்கள் அவரின் படம் வரும் பொது அப்படத்தை தூக்கி வைத்து எழுதுவது (சண் தொலைக்காட்சி போல) மற்ற நடிகரின் படங்களை எப்பளவு நல்ல படமாக இருந்தாலும் தூற்றி எழுதுவதாகவே எனக்கு படுகிறது. இந்த நிலையில் இவர்களே சண் தொலைக்காட்சியை விமர்சிப்பதை என்னவென்று சொல்வது.

20 கோடியில் எடுக்கப்படும் படங்களை அது உதவாத படம் என்று தெரிந்தும் போய் பார்த்து முதளியாவது எடுக்க தயாரிப்பளருக்கு உதவுவோர் வெறும் 4 கோடி பட்ஜெட்டில் உருவாகும் நல்ல படங்களை பார்க்காமல் அதுவும் போட்ட முதலையே எடுக்க முடியாமல் தயாரிப்பாளரை நட்டமுற செய்கிறார்கள்.

அண்மையில் வெளிவந்த பூ, பொம்மலாட்டம் போன்ற தரமான படங்களை பற்றி யாரவது எழுதினார்களா? எழுதியவர்களை கை விரல்களால் எழுதிவிடலாம். அது சரி இவர்கள் அப்படியான படத்தை பார்க்க மாட்டர்கள். பார்த்தால் தானே எழுதுவதற்கு.

அதிக பட்ஜெட்டில் வெளிவரும் படங்களை நாலைந்து தடவைகள் பார்ப்பவர்கள் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படும் தரமான படங்களுக்கு ஒருதடவையேனும் சென்றால் இன்னும் ஆரோக்கியமான சினிமாக்கள் வெளிவர உதவியாய் இருக்கும்.

தென்னகத்தில் மட்டும் நடக்கும் ரசிகர்களின் ஆர்ப்படங்கள் தான் நல்ல சினிமாவை வெளிவருவதை தடுக்கிறது. இந்த நிலை வலைப்புக்களிலும் ஆரம்பமாவது ஆரோக்கியமான சினிமாவிற்கு நல்லதல்ல.

ஒரு சில உதாரணங்கள்
* தங்களின் தலைவருக்கு (?) அதாவது அவர்களுக்கு பிடித்த நடிகைன் பிள்ளையின் பிறந்தநாளுக்கு போஸ்டர் ஓட்டுவது, கண்ட கண்ட மாதிரி புகழ்வது.

* தங்கள் தலைவருக்கு (?) கிடைத்த கொளரவ டாக்டர் பட்டத்தை, அவர் பட்ட படிப்பு படித்து எடுத்தது போல காட்டி விளம்பரம் செய்வது

* பனருக்கு பாலாபிசேகம் செய்வது இப்போது பீர் அபிஷேகமும் நடக்குது.

* சொந்த செலவில் அவரவர்களுக்கு பிடித்த நடிக்க நடிகைகளுக்கு பனர் வைப்பது (இவ்வாறு வைப்பவர்கள் யார் என பார்த்தால் நடுத்தர குடும்பத்தை சார்ந்தவர்கள் தான், அவரவர் குடும்பத்தின் நிலையை என்ன வென்று சொல்லவது)

இந்த பட்டியல் இப்படியே தொடரும் ...

இந்த நிலை இப்போது வலைப்புக்களில் ஆரம்பித்திருப்பது ஆரோக்கியமானது அல்ல. தவறுகள் திருத்தப்படனும். நல்ல தரமான சினிமாக்கள் வெளிவர எல்லோரும் உதவனும்..


இரா பிரஜீவ்
28/01/2009

8 comments:

Sourav said...

அறிவு கொளுந்துன்னே... நீங்க....

//விமர்சனத்தின் விதிமுறை அறியாதோர் எழுதுவதுதான் கொடுமையிலும் கொடுமை. //

விதிமுறை என்னனு அடுத்து ஒரு பதிவு போடீங்கன்னா எல்லோரும் தெரிஞ்சுப்பாங்கலே....

//சரி எழுதுவது அவரவர் உரிமை என வைத்து கொள்வோம், உதவாத படம் என ஒரு படத்தையே தாக்கி எழுதுவோர் நல்ல படங்களை பற்றி ஒரு வரியேனும் எழுதாமல் இருப்பது ஏன்?//

ரொம்ப பேர் எழுதுராங்கன்னே... நீங்க படிக்காம விட்டு இருப்பேங்க...

//அண்மையில் வெளிவந்த பூ, பொம்மலாட்டம் போன்ற தரமான படங்களை பற்றி யாரவது எழுதினார்களா? //

நீங்களும் எழுதலன்னே....

//இந்த நிலை இப்போது வலைப்புக்களில் ஆரம்பித்திருப்பது ஆரோக்கியமானது அல்ல. தவறுகள் திருத்தப்படனும். நல்ல தரமான சினிமாக்கள் வெளிவர எல்லோரும் உதவனும்..///

ரொம்ப நன்றிண்ணே.... அறிவு கண்ண திறந்துடீங்க.... நல்ல மாற்றம் வரும்.

கிரி said...

நீங்கள் கூறுவதில் பெரும்பாலானவற்றை ஏற்று கொள்கிறேன்

நித்யகுமாரன் said...

மிக மிகச் சரி...

நல்லா உறைக்கிற மாதிரி சொல்லுங்க சார்

அன்பு நித்யன்

டுல்பி கணேசன் said...

//எழுதியவர்களை கை விரல்களால் எழுதிவிடலாம்.//

எழுதுறது எல்லாருமே கையாள தானே எழுதுறாங்க.. என்ன தம்பி இது சின்னப் புள்ளத் தனமா.. ;)

//நல்ல படங்களை பற்றி ஒரு வரியேனும் எழுதாமல் இருப்பது ஏன்? //

அப்பிடியா? சரிங்க.. நீங்களே ஒரு நல்ல படத்துக்கு விமரிசனம் எழுதிக் காட்டுங்களேன்.. நாங்க எல்லாம் பாலோ பண்ணுறோம்..

நிமல்-NiMaL said...

நீங்கள் சொல்வது ஓரளவு சரி தான்...!

ஆனாலும் //அண்மையில் வெளிவந்த பூ, பொம்மலாட்டம் போன்ற தரமான படங்களை பற்றி யாரவது எழுதினார்களா?// என்பதை விட அவற்றை பற்றி எழுதும் பதிவுகள் பிரபலம் அடைவதில்லை என்பதை உண்மை.

'சப்பை' படங்கள் எவ்வாறு மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறதோ அவ்வாறே சப்பை பதிவுகளும் பிரபலமாகின்றன.

//விமர்சனத்தின் விதிமுறை அறியாதோர் எழுதுவதுதான் கொடுமையிலும் கொடுமை. //

அவ்வாறு விமர்சன இலக்கண இலக்கியம் அறிந்தோர் மாத்திரமே எழுதுவதேன்றால் ஒரு 10 - 20 விமர்சனங்கள் கூட வராது.

வலைப்பதிவுகளில் எழுதப்படுபவை பலவும் விமர்சனங்களாக அன்றி, நாம் திரையரங்கை விட்டு வெளியேறி செய்யக்கூடிய 'casual' உரையாடல்களாகவே அமைவதுண்டு.

நீங்கள் உங்கள் துறைசார் விடையமாக திரைப்படங்களை பார்ப்பதால் உங்கள் விமர்சன கண்ணோட்டம், சாதாரணமானவர்களின் 'just in time response' இலிருந்து வேறுபடவே செய்யும்.

ஆதித்தன் said...

//சப்பை' படங்கள் எவ்வாறு மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறதோ அவ்வாறே சப்பை பதிவுகளும் பிரபலமாகின்றன.//

//அவ்வாறு விமர்சன இலக்கண இலக்கியம் அறிந்தோர் மாத்திரமே எழுதுவதேன்றால் ஒரு 10 - 20 விமர்சனங்கள் கூட வராது.//

என்று நிமல் கூறுவதை நான் மிகவன்மையாக ஆமோதிக்கிறேன்.

ஆதித்தன் said...

அடப்பாவி! கொஞ்சநாளா இணையப்பக்கமே வராம இருந்தன்.அதுக்குள்ள இவ்வளவு பதிவு போட்டிடியே!
உங்க ஏதும் பந்தயம் நடக்குதோ? ஹி ஹி ஹி!

//இந்த நிலை இப்போது வலைப்புக்களில் ஆரம்பித்திருப்பது ஆரோக்கியமானது அல்ல. தவறுகள் திருத்தப்படனும். நல்ல தரமான சினிமாக்கள் வெளிவர எல்லோரும் உதவனும்//

மச்சான்! வலைப்பூ உலகம் எண்டது
ஊர்வாய்!
உலைவாய மூடினாலும் ஊர்வாய மூட ஏலா!
கண்ட கண்டதுகளைப் பற்றி கதைக்கத்தான் செய்யும்.

Dyena Sathasakthynathan - டயானா சதா'சக்தி'நாதன் said...

Yaa i agree with u Prajeev....

அதேவேளை
எனது வலைப்பூவிற்குள் வருகை தந்து அதை வனப்பாக்கியமைக்கு மிக்க நன்றி !

Dyena

Post a Comment